அவள்,
அன்பின் இலக்கணம்
ஆருயிர் தோழி
இயல்பாய் இருப்பவள்
ஈகை நிறைந்தவள்
உண்மை உரைப்பவள்
ஊக்கம் தருபவள்
எளிமையாய் இருப்பவள்
ஏற்றம் தருபவள்
ஐயம் தவிர்ப்பவள்
ஒற்றுமை கற்பிப்பவள்
ஓய்வின்றி உழைப்பவள்
ஔடதம் போன்றவள்
ஃ என்று முடியாதவள்.....
அவள் . . . .
அன்னை....
Sunday, April 4, 2010
Saturday, April 3, 2010
Few old ones...
தண்ணீர் தண்ணீர் . . . . .
பாலைவனத்தில் பறக்கும் பறவைகள் நாங்கள்
தூரத்தில் தொண்டை அடைக்க பறக்கின்றோம் - நெடும்
தூரம் பறந்த பின்னே அடைந்தோம் - ஒரு தடாகம்
பசும் சோலை நடுவே வற்றிய கிணறு!!
----------------------------------------------------------------------------------------
வாக்குறுதி . . . .
வாக்குறுதி முழுமதியை போன்றது - உடன்
நிறைவே(ற்)றாவிட்டால் தேய்ந்து விடும்...
----------------------------------------------------------------------------------------
பிறப்பவன் இறப்பான் - இது
மனித நியதி
இறந்தவன் (மீண்டும்) பிறப்பான் - இது
மனதின் அமைதி . . . .

முதல் (க)விதை
One of the poems written in the school days...
மனதில் வித்திட்டேன், அதோடு
சிந்தனை எனும் உரமிட்டேன், அதில்
கற்பனை எனும் சூரிய ஒளியில்
விளை பயிராக தோன்றியது - ஒரு கவிதை !!
மனதில் வித்திட்டேன், அதோடு
சிந்தனை எனும் உரமிட்டேன், அதில்
கற்பனை எனும் சூரிய ஒளியில்
விளை பயிராக தோன்றியது - ஒரு கவிதை !!
Inauguration.... துவக்கம்
வணக்கம் நண்பர்களே!!!
இது வலையில் (internet) என் கவிதைகளின் முதல் பயணம்... வலைமனையில் நிறைய கவிதைகள் வலம் வருவதை பார்த்திருக்கிறேன்.. யோசித்தும் இருக்கிறேன், இருக்கும் என்னுடைய கவிதைகளையும் ஏன் வலைதளத்தில் பதியக்கூடாது என்று ?? வலைப்பதிவின் மூலமாக நான் என்னுடைய நினைவுகளை பதிய விரும்பியதும் அப்படித்தான்..
சிறு வயது முதல் பலருக்கு பல ஈடுபாடுகள் இருப்பது வழக்கம்; எனக்கு ஏனோ கவிதையின் மேல் ஒரு அதீதமான ஈடுபாடு... எண்ணங்களின் வெளிப்பாடாக அவ்வப்பொழுது வந்து கொண்டிருந்த கவிதை ஒரு ஓடையிலிருந்து பாயும் நதிப்பிரவாகம் ஆவதற்கு அதிகம் ஆண்டுகள் எடுக்கவில்லை...
எனவே, இந்த வலைப்பதிவின் மூலமாக என்னுடைய எண்ணங்களுக்கு ஒரு புதிய பயணத்தை உருவாக்கி இருக்கிறேன்.. நீங்களும் இந்த பதிவுகளை படித்து உங்கள் மதிப்பீடுகளை வழங்குங்கள்... என்றும் அன்புடன்...
Hello Friends!!
This is for those who are helpless with the Tamil wordings above.. Welcome to this repository of my scattered thoughts.. As the name says, this has the scattered thoughts that had once pounded my mind, some flow as a breeze.. And, we never know which thought strikes at which time..
I am planning to pen my thoughts, as they come.. To start with, I am posting the poems written by me long back..
Please keep the comments posted.. Comments are welcome, for improvement... ;)
Subscribe to:
Posts (Atom)