Wednesday, February 16, 2011

நினைவலைகளின் வழியே..

கண் முன் வந்த காற்றை கிழித்து
காதில் நுழைந்த வார்த்தை தவிர்த்து
கண்கள் இரண்டால் உன்னை இழுத்து - நம்
கைகள் கோர்த்து நடை பயின்று
செல்வோம் பிரியாமல், அன்பே - நம்
நினைவலைகளின் வழியே.... 



Translation: Tearing the air that hits out eyes, avoiding the words that enter the ears, binding you with my hands (<==literal translation for first 3 lines) Removing the obstacles that prohibit us to meet, Oh Dear, We shall walk with our hands together in the path enlivened by our thoughts..

உன்னால் நான்...

உன்னை நினைத்து நான் இருந்தேன்
உன் வரவை பார்த்து காத்திருந்தேன்
உன் முன் நின்று இதழ் சிரித்தேன்
உன் கைகள் கொண்டு எனை உணர்ந்தேன்
உன் மௌனம் கண்டு பயந்திருந்தேன்
உன்னால் நான் இன்று மௌனம் ஆனேன்...



Translation: I had been waiting for you, thinking about you all the time. I smiled when you came, atlast, and felt myself with you (your hands).. but I was afraid because of your everlasting silence.. and due to your silence, I am dumbstruck - without you and unable to get away from your thoughts..

குழந்தைகள் தின சிந்தனை... Thoughts of Ironies on Childrens' Day


வருவோர் பசி தீர்க்கும் பொறுப்பில்
பசி பொறுக்காத உயிர் - உணவகத்தில் சிறுவன்!
புத்தகச்சுமை ஏறாத தோள்களில் ஏனோ 
குடும்பச்சுமை - சுமைதாங்கியாய் சிறுவன்!
திமிருடன் ஊர் சுற்றும் மக்கள் விழிக்கும் முன் 
கணக்குப்பாடம் படிக்கும் வயது ஏனோ 
படிக்கின்றான் களவுப்பாடம் - திசைமாறிய சிறுவன்!

Thursday, October 14, 2010

இருட்டில் ஒளி...

உன்னை நினைத்து நானிருக்கையில்
என்னுள் ஏதோ நெருடல்...
இருட்டின் நுனியில் ஒளி
ஒன்றுமறிய இடத்தில் வெளிச்சம்!!
ஆம்...
எனக்குள் இருக்கும் நீ, விழித்துவிட்டாய்!!

Translation: I was there, filled with your thoughts. Suddenly got something disturbing me and my thoughts. It felt as if there was light at the tip of darkness, brightness in an unknown dark place.. Yes, the resident in me, none other than You, have woken up from your sleep...

தீர விசாரித்த.... மெ(பொ)ய்

கண்ணால் காண்பதும் பொய், காதால்
கேட்பதும் பொய் - தீர விசாரிப்பதே
மெய்யென்று விசாரித்தேன் உன்னை - உன்
மனதறிய பொய் சொல்லிச் சென்றாயே...
என்னை விரும்பவில்லை என்று.....!!

Translation: I believe it is not right to infer from what is seen through eyes or heard through words. I believed it is right to ask you in person. You proved it is also wrong, by knowingly uttering a lie, that you do not like me....

Some Thoughts...



உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்
என்னை நினைத்து நான் மகிழ்வேன் - ஏக்கத்துடன், நீ 
என்னை பார்த்து சிரிக்கும் நொடிகளுக்காக.....


Translation: Whenever I think of you, I feel happy for myself.. with lots of anxiety, I wait for long time - for the simple smile which comes out of your lips... 
------------------------------------------------------------------------------------------------------
மனம் துடிக்குது உன் கரம் பிடித்திடவே - தினம் தினம் உன் முகம் பார்த்திடவே - நெஞ்சம் தவிக்குது உன் இதயம் திறந்து பேசடியே - என் அவளே, என்னவளே!


Translation: My heart wants to hold your hands, wants to see your face daily; the heart is suffering a lot, oh my sweet lady, open your heart and speak out its words... (Its kind of a rhyming sentence in Tamil)

பசியின் கொடுமை

கண்கள் காய்ந்திருந்த நிலையில்
விழித்தெழுந்தேன்   - உன் முன்னால்...
பார்த்து சிதறிப்போனது, என் எண்ணங்கள்...
பாரம் சுமந்த நிலையில்
எழுவது வயது "இளைஞர்"
"வேலை" இல்ல திண்டாட்டம் - பசியின் கொடுமை....


Translation: I woke up before you, with a dried up and dimly lit eyes. My thoughts were broken into pieces, after seeing this before me.. Carrying heavy loads, there was a "young man" of seventy years.. This reminded me of the Unemployment problems, (I am a part of that, too!!), and the problems people face because of poverty and hunger...