Thursday, August 5, 2010

எனக்குள் நீ ...

எனக்குள்  இருந்து  உயிர்  வாழ்கிறாய்
உன் நினைவில் என்னை வாழ்விக்கிறாய்
உன் சுவாசம் கொண்டென்னை உயிர்ப்பிக்கிறாய்
உன் அரவணைப்பில் என்னை ஆட்கொண்டிருக்கிறாய் 
உன் முகம் பார்க்க என்னை தூண்டிலிடுகிறாய்
உன் அருகே இருக்க என்னை சுண்டி இழுக்கிறாய்
உன் நினைவை தினமும் சுரக்கவைக்கிறாய்
உன் பணி செய்ய பணிக்கிறாய் - தினம் 
உன் வரவுக்காக காத்திருக்க வைக்கிறாய்....
இறைவா,
மறந்தும் உனை  மறவாதிருக்க வைத்திருக்கிறாய்... 

You live within me, You make me alive with your presence, You make me breathe with your thoughts, You take me under your control, You make me tempted with your appearance, You pull me more towards you, You make your thoughts generate within me, You order me to be your slave, You make me wait for your visit...
Oh Lord, You make me forget the thought of forgetting You!!! 

Back after a long break...

After a long stop, I am updating few more of my poems...

பொத்திவைத்த என் காதலை நான் 
சொல்லும் முன்னே சொல்லி விட்டாள் அவள், 
தன் காதலை...... அவள்
காதலனிடம்!!! 

Hidden were my Love for her, until I wanted to tell it explicitly. But, she was more quick than I was...
She told her love, in a very bold attempt... To her Lover!!!

Wednesday, May 26, 2010

After a long time, an update... ;) with English translation

This thought splashed into my minds when I was travelling in the MRTS this morning..

 கண்ணீரோடு மனம் வெதும்ப நின்றாய் நீ - காதலே
கலங்காதே என்று அரவணைத்து நின்றான் அவன்  - இருவருக்கும்
மத்தியில் பூஜை கரடியாக தூதுவன் - ஆம்
உன் நினைவில் உனக்காக தூது செல்கிறேன், நான்!!

Means: You were standing with tears in your eyes, and there was a guy calling you his love, comforting you not to cry.. And there was a third person, a messenger, standing between both of you as a obstructing pillar - a disturbance, rather... Yeah, my love, the job of a messenger had been taken by me, in your thoughts which are ever green in my mind..

Sunday, April 4, 2010

அவள் . . . .

அவள்,
அன்பின் இலக்கணம்
ஆருயிர் தோழி
இயல்பாய் இருப்பவள்
ஈகை நிறைந்தவள்
உண்மை உரைப்பவள்
ஊக்கம் தருபவள்
எளிமையாய் இருப்பவள்
ஏற்றம் தருபவள்
ஐயம் தவிர்ப்பவள்
ஒற்றுமை கற்பிப்பவள்
ஓய்வின்றி உழைப்பவள்
ஔடதம் போன்றவள்
ஃ என்று முடியாதவள்.....

அவள் . . . .

அன்னை....

Saturday, April 3, 2010

Few old ones...

தண்ணீர் தண்ணீர் . . . . . 
பாலைவனத்தில் பறக்கும் பறவைகள் நாங்கள்
தூரத்தில் தொண்டை அடைக்க பறக்கின்றோம் - நெடும்
தூரம் பறந்த பின்னே அடைந்தோம் - ஒரு தடாகம்
பசும் சோலை நடுவே வற்றிய கிணறு!!
----------------------------------------------------------------------------------------
வாக்குறுதி . . . .
வாக்குறுதி முழுமதியை போன்றது - உடன்
நிறைவே(ற்)றாவிட்டால் தேய்ந்து விடும்...
----------------------------------------------------------------------------------------
பிறப்பவன் இறப்பான் - இது
                           மனித நியதி
இறந்தவன் (மீண்டும்) பிறப்பான் - இது
                           மனதின் அமைதி . . . .
----------------------------------------------------------------------------------------

முதல் (க)விதை

One of the poems written in the school days...

மனதில் வித்திட்டேன், அதோடு
சிந்தனை எனும் உரமிட்டேன், அதில்
கற்பனை எனும் சூரிய ஒளியில்
விளை  பயிராக தோன்றியது - ஒரு கவிதை !!

Inauguration.... துவக்கம்

வணக்கம் நண்பர்களே!!!
               இது வலையில் (internet) என் கவிதைகளின் முதல் பயணம்... வலைமனையில் நிறைய கவிதைகள் வலம் வருவதை பார்த்திருக்கிறேன்.. யோசித்தும் இருக்கிறேன், இருக்கும் என்னுடைய கவிதைகளையும் ஏன் வலைதளத்தில் பதியக்கூடாது என்று ?? வலைப்பதிவின் மூலமாக நான் என்னுடைய நினைவுகளை பதிய விரும்பியதும் அப்படித்தான்..
             சிறு வயது முதல் பலருக்கு பல ஈடுபாடுகள் இருப்பது வழக்கம்; எனக்கு ஏனோ கவிதையின் மேல் ஒரு அதீதமான ஈடுபாடு... எண்ணங்களின் வெளிப்பாடாக அவ்வப்பொழுது வந்து கொண்டிருந்த கவிதை ஒரு ஓடையிலிருந்து பாயும் நதிப்பிரவாகம் ஆவதற்கு அதிகம் ஆண்டுகள் எடுக்கவில்லை... 
             எனவே, இந்த வலைப்பதிவின் மூலமாக என்னுடைய எண்ணங்களுக்கு ஒரு புதிய பயணத்தை உருவாக்கி இருக்கிறேன்.. நீங்களும் இந்த பதிவுகளை படித்து உங்கள் மதிப்பீடுகளை வழங்குங்கள்... என்றும் அன்புடன்...

Hello Friends!!
        This is for those who are helpless with the Tamil wordings above.. Welcome to this repository of my scattered thoughts.. As the name says, this has the scattered thoughts that had once pounded my mind, some flow as a breeze.. And, we never know which thought strikes at which time.. 
     I am planning to pen my thoughts, as they come.. To start with, I am posting the poems written by me long back.. 
Please keep the comments posted.. Comments are welcome, for improvement... ;)